நாளுக்கு நாள் அச்சுறுத்தும் ஹண்டா வைரஸ்: ஸ்பெயினில் மற்றுமொருவருக்கு தொற்று
சுற்றுலா கப்பல் ஒன்றில் பரவிய ஹண்டா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஸ்பெயினில் ஒரு பயணிக்கு இந்தத் தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
'எம்வி ஹோண்டியஸ்' (MV Hondius) என்ற சுற்றுலா கப்பலில் பயணம் செய்தவர்களில் இதுவரை 11 பேருக்கு ஹண்டாவைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் துரதிர்ஷ்டவசமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலில், கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட 120-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் ஊழியர்களில், ஸ்பெயினைச் சேர்ந்த ஒருவருக்கும் தற்போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹண்டா வைரஸ்
ஸ்பெயின் நாட்டின் சுகாதார அமைச்சகம் இது குறித்துக் கூறுகையில், "பாதிக்கப்பட்டவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகள் உள்ளன. இருப்பினும் அவர் தற்போது சீராக உள்ளார், உடல்நிலை மோசமடையவில்லை" என்று தெரிவித்துள்ளது.

அவருடன் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட மற்ற 14 ஸ்பெயின் நாட்டவர்கள் மாட்ரிட்டில் உள்ள இராணுவ மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தத் தொற்றில் பெரும்பாலானவை 'ஆண்டிஸ்' வகை வைரஸ் என கண்டறியப்பட்டுள்ளது.
அதிரடி முடிவு எடுத்து நிலா கேட்ட கேள்வி, ஆடிப்போய் நின்ற சேரன்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam