ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லை மோதல்:370க்கும் மேற்பட்டோர் பலி
ஆப்கானிஸ்தானின் தலிபான் படைகளுக்கும் பாகிஸ்தான் இராணுவத்திற்கும் இடையே நிலவி வரும் எல்லை தாண்டிய வன்முறை குறித்து ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சியூட்டும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் குறைந்தது 372 பொதுமக்கள் இந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளதாகவும், 397 பேர் காயமடைந்துள்ளதாகவும் உயிரிழந்தவர்களில் 13 பெண்கள் மற்றும் 46 குழந்தைகளும் அடங்குவர்.
2011ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தப் பகுதியில் பதிவான மிக அதிகப்படியான உயிரிழப்பு எண்ணிக்கை இதுவென ஐநா சுட்டிக்காட்டியுள்ளது.
உயிரிழப்பு
இந்த மொத்த உயிரிழப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை கடந்த மார்ச் 17 அன்று காபூலில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மையம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலால் நிகழ்ந்துள்ளன. இந்தத் தாக்குதலில் மட்டும் 269 பேர் கொல்லப்பட்டனர்.

அங்கு ஆண்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வந்ததால் பலியானவர்களில் பெரும்பாலோர் ஆண்களாக இருந்தனர். வான்வழித் தாக்குதல்களே மொத்த உயிரிழப்புகளில் 64 சதவீதத்திற்குக் காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
எஞ்சிய உயிரிழப்புகள் எல்லை தாண்டிய எறிகணை வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு மூலம் நிகழ்ந்துள்ளன.
பேச்சுவார்த்தை
பயங்கரவாதக் கட்டமைப்புகளை மட்டுமே தாங்கள் இலக்காகக் கொள்வதாகப் பாகிஸ்தான் வாதிட்டாலும், பொதுமக்கள் வசிக்கும் இடங்கள் மற்றும் மருத்துவமனைகள் பாதிக்கப்படுவது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என ஐ.நா எச்சரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் சீனாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஒரு தற்காலிக போர்நிறுத்தம் உடன்பாடான போதிலும், எல்லைப் பகுதிகளில் அவ்வப்போது மோதல்கள் நீடித்து வருகின்றன.
பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது இடங்களைக் குறிவைத்து நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை ஒரு "வெளிப்படையான போர்" நிலைக்குத் தள்ளியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan