ஹங்வெல்ல மயானத்திலிருந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்பு
கொழும்புக்கு அருகே ஹங்வெல்ல மயானத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டு தற்போதைக்கு தடுப்புக்காவலில் உள்ள 'பஸ் லலித்' என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலதிக விசாரணை
அதனடிப்படையில், ஹங்வெல்ல பகுதியிலுள்ள மயானமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டி56 துப்பாக்கிகள் மூன்றும் மற்றும் ஒரு தொகுதி தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹங்வெல்லை பிரதேசத்தில் கடந்த காலத்தில் நடைபெற்ற பல்வேறு படுகொலைகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கு இந்தத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23