ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கடத்தி கொலை: சதித்திட்டம் தீட்டிய மனைவி கைது
கம்பஹா - கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரை கடத்திச்சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் மனைவியை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கைது செய்துள்ளது.
நேற்று (07) மதியம் கிரிந்திவெல, நாரங்கஸ்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை கடந்த 2018.09.09 அன்று இடம்பெற்றுள்ளது.
மனைவி கைது
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக்கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

இதற்கமைய, புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, இக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமை மற்றும் சதித்திட்டம் தீட்டியமைக்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபரான கொல்லப்பட்ட நபரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாரங்கஸ்பிட்டிய, கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் என்பதுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருடப்பட்ட ஆயிரக்கணக்கான கணக்குகள்..! இலங்கையில் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு அவசர எச்சரிக்கை
பாதாள உலகக்கும்பல் தலைவரின் பரபரப்பு வாக்குமூலம்! மயானத்திலிருந்து அடுத்தடுத்து மீட்கப்பட்ட ஆயுதங்கள்
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23