ஈரான் போரால் எரிபொருள் ஏற்றுமதி பாதிக்கப்படாது: ஐக்கிய அரபு இராச்சியம் உறுதி
வொஷிங்டன் மற்றும் ஈரானுக்கு இடையே நிலவி வரும் போர் சூழலுக்கு மத்தியில், தனது எரிபொருள் ஏற்றுமதியும் பொருளாதார நடவடிக்கைகளும் முடங்கிவிடாத வகையில் மாற்று வழிகளை உருவாக்கி வருவதாக ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவித்துள்ளது.
அபூதாபியில் நடைபெற்ற ஹிலி உச்சிமாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி ஆலோசகர் அன்வர் கர்காஷ், நாட்டின் கிழக்கரை துறைமுகங்களின் திறனை அதிகரிப்பதுடன், புதிய குழாய் வழிகள் மற்றும் தொடருந்து போக்குவரத்து மூலம் மாற்று வர்த்தக பாதைகளை உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்டார்.
எரிபொருள் விநியோகம்
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்த நீரிணை சர்வதேச நல்வழிப் பாதையாகவே தொடர வேண்டும் என ஐக்கிய அரபு இராச்சியம் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, பாதுகாப்பு விவகாரங்களில் அமெரிக்கா போன்ற நட்பு நாடுகளை மட்டும் முழுமையாக நம்பியிருக்க முடியாது என அக்கூட்டத்தில் உரையாற்றிய கதார் வெளி விவகார அமைச்சின் பேச்சாளர் மாஜித் அல்-அன்சாரி தெரிவித்தார்.
பிராந்திய பாதுகாப்புக்கு சொந்த தேசிய வல்லமைகளை கட்டியெழுப்புவதே ஒரே வழி என அவர் சுட்டிக்காட்டினார்.
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri