கொழும்பில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் : இருவர் சுட்டுக்கொலை
கொழும்பின் புறநகர் பகுதியான பாதுக்க, துந்தான பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பாதாள உலகக் குழு உறுப்பினர் மன்னா ரொஷான் மற்றும் அவரது ஆதரவாளர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் 2 சடலங்களும் கண்டெடுக்கப்பட்டதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மீட்பு
பாதுக்கவில் உள்ள ஏல காணியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாம்பல் நிற ஜீப்பில் ஒருவரின் சடலம் காணப்பட்டதுடன், மற்றைய சடலம் அருகில் காணப்பட்டது.
ஜீப்பிற்குள் கண்டெடுக்கப்பட்ட சடலம் பாதாள உலகக் குழு உறுப்பினர் காரியவசம் அத்துகோரல ரொஷான் இந்திக்க என்றழைக்கப்படும் மன்னா ரொஷானின் சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

முழுசா 10 ஆண்டுகளுக்கு பின் வரும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அதிஷ்டம் எந்த ராசிகளுக்கு? Manithan

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
