புள்ளிப்பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்த குஜராத் டைட்டன்ஸ்
ஐ.பி.எல். சீசனின் 51ஆவது லீக் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது.
இதில் குஜராத் டைட்டன்ஸ்(GT), சன்ரைசர்ஸ் ஐதராபாத்(SRH) அணிகள் மோதின.
குஜராத் டைட்டன்ஸ் அணி
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ஓட்டங்களை குவித்தது.
சிறப்பாக ஆடி அரை சதமடித்த சுப்மன் கில் 76 ஓட்டங்களுடனும், பட்லர் 37 பந்தில் 64 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
சாய் சுதர்சன் 23 பந்தில் 48 ஓட்டங்கள் குவித்தார். ஐதராபாத் அணி சார்பில் உனத்கட் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
ஐதராபாத் அணி
இதையடுத்து, 225 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடினார்.
அரை சதம் கடந்த அவர் 41 பந்தில் 74 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
மற்ற முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இறுதியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 186 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது.
இது குஜராத் அணியின் 7வது வெற்றி ஆகும்.இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்துக்கு குஜராத் அணி முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 10ஆம் நாள் மஞ்சத்திருவிழா





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 15 மணி நேரம் முன்

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
