ஐபிஎல் 2025- புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் எந்த அணி..!
18ஆவது ஐ.பி.எல். தொடரின் 50-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ்(RR) மற்றும் மும்பை இந்தியன்ஸ்(MI) அணிகள் மோதின.
நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
மும்பை அணி
இதற்கமைய முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 217 ஓட்டங்கள் குவித்தது.
முதல் விக்கெட்டுக்கு ரோகித் சர்மா- ரிக்கல்டன் ஜோடி 116 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ரிக்கல்டன் 61 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக ஆடிய ரோகித் 53 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இணைந்த சூர்யகுமார் - ஹர்திக் பாண்ட்யா இருவரும் கடைசி வரை நின்றனர்.
ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் தலா 48 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ராஜஸ்தான் ரோயல்ஸ்
இதையடுத்து, 218 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ரோயல்ஸ் களமிறங்கியது.
முதல் ஓவரில் அதிரடி வீரர் சூர்யவன்ஷி டக் ஆட்டமிழந்தார். 2ஆவது ஓவரில் 2 சிக்சர் அடித்த ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார்.
4ஆவது ஓவரில் நிதிஷ் ரானா, 5ஆவது ஓவரில் ரியான் பராக் மற்றும் ஹெட்மயர் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஷுபம் துபே, துருவ் ஜுரலும் நிலைத்து நிற்கவில்லை இறுதியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 117 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
முதல் இடம்
இதன்மூலம் 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி பெற்றது.
மும்பை அணியின் 6ஆவது தொடர் வெற்றி இதுவாகும். அத்துடன், புள்ளிப்பட்டியலிலும் மும்பை அணி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்த தோல்வியின் மூலம் ராஜஸ்தான் ரோயல்ஸ் பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
You May Like This..

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
