யாழில் கோலாகலமாக நிகழ்ந்தேறிய பசுமை அமைதி விருதுகள் விழா!

Jaffna Northern Province of Sri Lanka School Children
By Kajinthan Jun 30, 2025 11:33 AM GMT
Report

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா நேற்று (29) கோலாகலமாக நிகழ்ந்தேறியுள்ளது.

மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைச் சூழல்பாதுகாப்புச் செயற்பாடுகளில் பங்கேற்பாளர்களாக்கும் நோக்குடன் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டு தோறும் பசுமை அமைதி விருதுகளை வழங்கி வருகிறது.

2024ஆம் ஆண்டுக்கான விருதுகளை வழங்கும் விழா நேற்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

அணுதளங்களில் மீண்டும் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்த ஈரான்!

அணுதளங்களில் மீண்டும் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்த ஈரான்!

விருதுகள்

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக வவுனியாப் பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தரும், வியாபாரக் கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியுமான பேராசிரியர் யோ. நந்தகோபன் கலந்துகொண்டிருந்தார்.சிறப்பு விருந்தினராக வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர்களில் ஒருவரான எந்திரி ச. சர்வராஜா கலந்து கொண்டிருந்தார்.

யாழில் கோலாகலமாக நிகழ்ந்தேறிய பசுமை அமைதி விருதுகள் விழா! | Green Peace Awards Ceremony At Jaffna

இந்த விழாவில் மாணவர்களிடையே அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட சூழல் பொது அறிவுப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களில் முதல் 250 மாணவர்கள் பசுமை அமைதிச் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள். இவர்களில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வெற்றியாளர்களுக்குச் சூழலியல் ஆசான் க.சி. க.சி. குகதாசன் ஞாபகார்த்தப் பசுமை அமைதி விருதுகள் வழங்கப்பட்டன.

முதலாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த ரூபிகா அருந்தவம் ஒரு பவுண் எடையுள்ள தங்கப் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இரண்டாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணம் மகாஜனக் கல்லூரியைச் சேர்ந்த கனிவிழி சுதாஜி வெள்ளிப் பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். மூன்றாம் இடத்தைப் பெற்ற மட்டக்களப்பு வின்சற் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த டிலுக்சினி டன்ஸ்ரன், மன்னார் சேவியர் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த றித்திக்கா அன்ர அன்ரன் பிலிப்ஸ், யாழ்ப்பாணம் மகாஜனக் கல்லூரியைச் சேர்ந்த கனிமொழி கணேசானந்தன் ஆகிய மூவரும் வெண்கலப் பதக்கங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள்.

ஒரு பில்லியன் ரூபா வரி ஏய்ப்பு செய்ததாக அர்ஜூன் அலோசியஸ் மீது வழக்கு

ஒரு பில்லியன் ரூபா வரி ஏய்ப்பு செய்ததாக அர்ஜூன் அலோசியஸ் மீது வழக்கு

பணப்பரிசு 

தாலகாவலர் மு.க. கனகராசா ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டுவரும் சிறந்த சூழல்நேயச் செயற்பாட்டாளருக்கான விருதை விருதை இம்முறை பாக்கியநாதன் சசிக்குமார், பாக்கியநாதன் ராஜ்குமார் ஆகிய இருவரும் பெற்றிருந்தார்கள். மரநடுகைப் பணியைச் சிறப்பாகச் செய்துவரும் சகோதரர்களான இருவருக்கும் ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.

யாழில் கோலாகலமாக நிகழ்ந்தேறிய பசுமை அமைதி விருதுகள் விழா! | Green Peace Awards Ceremony At Jaffna

மேலும், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் மாணவர்களிடையே நடாத்தப்பட்ட வீட்டுத்தோட்டப் போட்டியில் சிறந்த செய்கையாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் மாணாக்க உழவர்களாகவும், தாவரங்களை அடையாளம் காணும் போட்டியில் அதிக எண்ணிக்கையான தாவரங்களை அடையாளம் கண்டவர்கள் தாவராவதானிகளாகவும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

புலம்பெயர் தமிழர் கூட்டமைப்பின் அனுசரணையுடன் அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ள இவ்விழாவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறை விரிவுரையாளர் இ. பலகருத்துக்கழகத்தின் கல்வியியல் சர்வேஸ்வரா தொகுத்து வழங்கினார்.

இலங்கையில் வழங்கப்பட்டுவரும் சூழல்சார் விருதுகளில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் அனைவரினதும் கவனத்தை ஈர்த்த முன்னிலை விருதுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

வசந்த சமரசிங்கவுக்கு எதிராக இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வசந்த சமரசிங்கவுக்கு எதிராக இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Ilford, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Toronto, Canada

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
மரண அறிவித்தல்
42ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, Canada

07 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், அளவெட்டி வடக்கு, உருத்திரபுரம்

14 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Vancouver, Canada

11 Aug, 2025
அகாலமரணம்

ஏறாவூர், St. Gallen, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

12 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US