கரூர் சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணி! செந்தில் பாலாஜிக்கு பெருஞ் சிக்கல்
கரூரில் நேற்றையதினம்(27) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தின் போது நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையிலே, அவை தொடர்பான பல்வேறு காணொளிகள் இப்போது வெளியாகி இருக்கின்றன.
தமிழகத்தினுடைய எதிர்க்கட்சி தலைவராக இருக்கக் கூடிய எடப்பாடி பழனிச்சாமி ஒரு கருத்தினை முன்வைத்து இருக்கின்றார்.அது என்னவென்றால் விஜய் பிரசார கூட்டத்திலே உரையாற்றிக் கொண்டு இருக்கின்ற பொழுது அம்புலன்ஸ் வண்டிகள் வருகின்றது.
இதன்போது, எமது கொடியுடன் அம்புலன்ஸ் வண்டிகள் எதற்காக வருகின்றது என விஜய் கேள்வி எழுப்புகின்றார்.
இதெல்லாம் ஒரு சந்தேகத்திற்கு இடமான விடயம் என எடப்பாடி பழனிச்சாமி கூறுகின்றார்.
அத்தோடு, ஒரு நாளில் 157 கூட்டங்களை சுழன்று முடித்தவர் செந்தில் பாலாஜி.அவர் அமைதியாக இருக்கின்றார் என்றால் அதனை இலேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது தவெகவினர் என நாச்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
ஆனால் இங்கு சந்தேகம் வலுக்கின்றது எப்படியென்று பார்க்கின்ற போது தான் அடுத்த சந்தேகங்கள் தொடர்ச்சியாக வலுத்துக் கொண்டு இருக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி......
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



