மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பச்சை மிளகாயின் விலை! திடீர் உயர்வு
பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராமின் சில்லறை விலை 1000 ரூபாய் வரை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாயின் மொத்த விலை 500 தொடக்கம் 600 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
விலை சடுதியாக அதிகரிப்பு
இந்தநிலையில், சந்தைகளில் பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராமின் சில்லறை விலை 1000 ரூபாய் வரை உயர்வடைந்துள்ளது.
பச்சை மிளகாயின் அறுவடை குறைந்துள்ளதுடன், சந்தை வரத்தும் வெகுவாக குறைந்துள்ளமையின் காரணமாக இவ்வாறு விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, தக்காளி ஒரு கிலோகிராமின் விலையும் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தக்காளி ஒரு கிலோ கிராமின் மொத்த விலை 200 ரூபாவாகவும் சில்லறை விலை 500 ரூபாவாகவும் அதிகரித்து காணப்படுகின்றது.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 21 மணி நேரம் முன்

குழந்தையாக நடித்துவிட்டு அஜித்துக்கு ஜோடியாக நடிப்பீங்களா? பிரெஸ் மீட்டில் நடிகை யுவினா காட்டமான பதில் Cineulagam
