ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் தனியார் மயத்திட்டம் தொடர்பாக அநுர அரசாங்கத்தின் முடிவு
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தனியாருக்கு விற்பதற்கான திட்டங்களை கைவிடுவதாக அறிவித்துள்ளது.
சுற்றுலாத்துறையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தேசிய நிறுவனம் அரசுடன் இருக்கவேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார சபையின் தலைவர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக அதன் நிர்வாகத்தை மேம்படுத்த புதிய மாதிரி பரிசீலிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
51 சதவீத விற்பனை
முன்னைய அமைச்சரவை ஒரு தனியார் முதலீட்டாளரை ஈர்க்கும் நடவடிக்கையின் அடிப்படையில் 510 அமெரிக்க டொலர் கடன்களை எடுத்து முயற்சித்தது.
இதன்போது அரசுக்கு சொந்தமான 51 சதவீதத்தை விற்பனை செய்யவும் அரசாங்கம் முடிவு செய்திருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |