கொழும்பிலுள்ள அரச வங்கியில் பாரிய தங்க மோசடி! விசாரணையில் அதிர்ச்சித் தகவல்
கொழும்பில் அரச வங்கி ஒன்றில், போலி நகைகளை அடகு வைத்து 163 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த குறித்த வங்கியின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான இந்திக நிஷாந்த என்ற முகாமையாளரை, அடுத்த மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தங்க நகைகள்
கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 26 முறை திட்டமிட்டு இத்தகைய மோசடியில் அவர் ஈடுபட்டுள்ளதை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கண்டுபிடித்துள்ளது.
அதற்கமைய, பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் இந்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து, குற்றப் புலனாய்வு பிரிவினர் முகாமையாளரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
வங்கியின் பாதுகாப்பு நடைமுறைகளை மீறி, போலிப் பொருட்களை தங்கமாக அடகு வைத்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெறவும், இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என அறியவும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலா என் ஆளு, பத்திரமா கூட்டிட்டு போ, சோழனிடம் கூறிய ராகவ், அடுத்து நடந்தது?... அய்யனார் துணை சீரியல் Cineulagam
சந்தோஷ செய்தியை வெளியிட்டுளள சிறகடிக்க ஆசை வெற்றி மற்றும் அவரது மனைவி... ஆனா இது வேற நியூஸ் Cineulagam
தங்கம் முதல் வெள்ளி நாணயம் வரை…ஜேர்மனியில் 2000 ஆண்டுகள் பழமையான புதையல் கண்டுபிடிப்பு News Lankasri