பிரான்ஸில் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த அவல நிலை
பிரான்ஸில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் குடும்பம் பெரும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
63ஆவது பிராந்தியத்தின் Clermont-Ferrand பகுதியில் வசிக்கும் இந்தக் குடும்பம் தங்களின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கடும் குளிர் காலத்திலும் வெளியேற்றங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், இந்த குடும்பத்தின் புகலிட விண்ணப்பம் மறுக்கப்பட்ட காரணத்தால் இவர்கள் சில நாட்களில் வீடற்றவர்களாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குடும்பத்தின் அவல நிலை
இந்தக் குடும்பத்தின் துயரத்தைக் கண்டு மனம் வருந்திய அந்தப் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் பெண் ஒருவர், அவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார்.

தொண்டு நிறுவனங்கள் மற்றும் அவசரத் தங்குமிடங்கள் அனைத்தும் ஏற்கனவே நிரம்பிவிட்ட நிலையில், அவர் ஒரு தனித்துவமான முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
தானே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அந்தக் குடும்பத்திற்கு வழங்க அவர் திட்டமிட்டுள்ளார்.
அந்தப் பெண் தனது பெயரிலேயே வீட்டை வாடகைக்கு எடுக்கவும், அதற்கான வாடகையைத் தானே செலுத்தவும் முடிவு செய்துள்ளார்.
அவருக்கு ஆதரவாக பிணையாளராகவும் இருக்க அவரது சகோதரியும் இணக்கம் தெரிவித்துள்ளார்.