மன்னார் மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அறிவிப்பு
மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் இருந்து சிகிச்சை பெற்றுக் கொள்வதை தவிர்த்துக் கொண்டு உடனடியாக வைத்தியசாலைகளில் சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளுமாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கனகேஸ்வரன் மக்களிடம் பகிரங்க அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோய் நிலவரம் தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று (09.01.2024) மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜேர்மனியில் இருந்து இரகசியமாக வவுனியாவிற்கு எடுத்துவரப்பட்ட நவீன ஸ்கேனர்: வைத்தியர் உள்ளிட்ட மூவர் கைது
மேலும் தெரிவிக்கையில்,
டெங்கு நிலவரம்
ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது மன்னார் மாவட்டத்தில் டெங்கு நிலைமை கட்டுப்பாட்டில் காணப்படுகின்றது. எனினும் மாவட்டத்தில் டெங்கு நிலவரம் தொடர்பாக விசேட கவனம் செலுத்தி வருகிறோம்.
சில தினங்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என்பதால் விசேட கவனம் செலுத்தப்பட்டு டெங்கு தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கு சுகாதார துறையினருடன் இணைந்து பொலிஸ், இராணுவம் மற்றும் கிராம அலுவலர்கள் டெங்கு விசேட பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பலர் பங்கேற்பு
எனவே, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டால் வீடுகளிலிருந்து சிகிச்சை பெற்றுக் கொள்வதை தவிர்த்து வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் டெங்கு நோயினால் ஏற்படும் உயிராபத்துக்களை தவிர்த்துக் கொள்ள முடியும் என்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கனகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், சுகாதார துறையினர், பொலிஸார், பொது சுகாதார பரிசோதகர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் டெங்கு கட்டுப்பாடு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியிலும் இன்று (09.01.2023) டெங்கு கட்டுப்பாட்டு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
நேற்று முள்ளியான் கிராம சேவையாளர் பிரிவில் ஒருவருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே இன்றைய தினம் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நடவடிக்கையில் முள்ளியான் சமூர்த்தி உத்தியோகத்தர், பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டதுடன் டெங்கு தொற்று இனங்காணப்பட்ட இடங்களுக்கு சிவப்பு ஏச்சரிக்கையும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - Erimalai
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |