கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரித்தானிய பிரஜை கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பிரித்தானிய பிரஜை ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் போதைப்பொருள் விதைகளை கொண்டு வந்தவரே இவ்வாறு அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 53 வயதுடைய பிரித்தானிய பிரஜை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஞ்சா விதைகள்
சந்தேக நபரிடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பயணப்பொதியில் இருந்து 8 பொதிகளாக காணப்பட்ட 40 கிராம் நிறையுடைய கஞ்சா மற்றும் 58 கஞ்சா விதைகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பிரித்தானிய பிரஜை ஏற்கனவே கஞ்சா விதைகளுடன் கைது செய்யப்பட்ட நிலையில், அபராதம் செலுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் கஞ்சா விதைகளுடன் நேற்று விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இதுவும் குணசேகரன் சதி தான்.. புது முடிவெடுத்த ஜனனி! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam