ஈரானின் பலம் வாய்ந்த தலைவர் படுகொலை: ஈரானின் அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கை
ஈரான் மீதான நேற்றைய திடீர் தாக்குதலை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தாக்குதல்களில் ஈரானின் பலம் வாய்ந்த தலைவரான அலி கமெனி உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தளங்களுக்கு எதிரான 'மிகவும் தீவிரமான' நடவடிக்கை தொடங்க உள்ளதாக ஈரானிய புரட்சிகர காவல்படை உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் ஈரானிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய், காமேனியும் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முதலாம் இணைப்பு
ஈரான் உச்ச தலைவர் அலி கமெனி தாக்குதல்களில் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் இது தொடர்பில் ஈரான் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதன்படி தனது நாட்டு உச்ச தலைவரின் படுகொலைக்கு 40 நாட்கள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.
மேலும் ஏழு நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யார் இந்த அலி கமெனி?
1939 ஆம் ஆண்டு வடகிழக்கு நகரமான மஷ்ஹாத்தில் ஒரு மத அறிஞரின் மகனாக அலி கமேனி பிறந்தார். 1962 இல் ஷா மொஹமட் ரேசா பஹ்லவிக்கு எதிராக அயதுல்லா கொமேனியின் மத எதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்தார்.
1979 ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, அலி கமேனி துணை பாதுகாப்பு அமைச்சரானார் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையை ஒழுங்கமைக்க உதவினார்.
1989 ஜூன் மாதம் கொமேனியின் மறைவுக்குப் பிறகு, நிபுணர்கள் பேரவை அலி கமேனியை புதிய அதி உச்சத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. அரசியலமைப்பு விதிகளின்படி ஷியா மத குருமார்களிடையே தேவையான தகுதியான 'மர்ஜா-ஏ தக்லித்' அல்லது 'கிராண்ட் அயதுல்லா' நிலையை அவர் அடைந்திருக்கவில்லை என்றாலும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தச் சூழலைச் சரிசெய்யும் வகையில், அதி உச்சத் தலைவர் இஸ்லாமிய புலமையைக் கொண்டிருக்க வேண்டும் என்று அரசியலமைப்பு திருத்தப்பட்டது. இதன் மூலம் அலி கமேனி அயதுல்லாவாக மாறவும், அதி உச்சத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படவும் வழிவகை செய்யப்பட்டது.
அவர் ஈரானின் அரசியல் மற்றும் அதன் ஆயுதப்படைகளின் மீது ஒரு வலுவான பிடியைப் பேணி வந்தார். மேலும் ஆளும் முறைக்கு எதிரான சவால்களை சில நேரங்களில் வன்முறை மூலம் கடுமையாக ஒடுக்கினார். அயதுல்லா கமேனி, அமெரிக்காவுடனான தற்போதைய மோதல் உட்பட வெளிவிவகாரங்களில் தொடர்ந்து கடும்போக்கு நிலைப்பாடுகளை கையாண்டார்.
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam