வற் வரி அதிகரிப்பின் தாக்கம் : உடனடியாக அதிகரிக்கும் பணவீக்கம்
வற் வரி அதிகரிப்பு காரணமாக பணவீக்க வீதம் சடுதியாக உயர்வடையும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உயரும் பணவீக்கம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வற் வரி அதிகரிப்பினால் பணவீக்கம் வீதம் 2.5 வீதத்தால் அதிகரிக்க நேரிடும் என மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் கணித்துள்ளது.
இதனால் இலங்கையில் பணவீக்கம் உடனடியாக 6.4 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கலாம்.
வரி ஏய்ப்பு
இதேவேளை, வரி ஏய்ப்பு செய்யும் எந்தவொரு நபருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதன் மூலம் பணவீக்கத்தை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் மீண்டும் 5%க்குக் கொண்டு வர முடியும் என மத்திய வங்கியும் நிதி அமைச்சும் நம்பிக்கை வெளியிட்டுள்ளன எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 19 மணி நேரம் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
