"14 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க இலட்சக்கணக்கான ரூபா தேவை"
14 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுமாயின் அதற்கு இலட்சக்கணக்கான ரூபா பணம் தேவைப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் பல தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு
இவ்வாறானதொரு நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமானால் அரச சேவையை கட்டுப்படுத்த வேண்டும். வருமானத்தை பெருக்கினால் மட்டும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது.
வீண் செலவுகள் தொடர்பில் கட்டாயமாக அவதானம் செலுத்த வேண்டும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தால் மாத்திரமே நல்ல வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri
