வரிகளை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முடிவு
சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) ஒப்பந்தம் இல்லாவிட்டால் அரசாங்கம் வரிகளை நீக்கியிருக்கும் என்று பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ (Anil Jayantha Fernando) தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர், இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர், ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குறுதியளித்தபடி, அரசாங்கம் அதன் தொடக்க வரவு - செலவு திட்ட வரிகளை நீக்க முடியாமைக்கான காரணத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.
2025இன் வரவு -செலவுத் திட்டம்
இது தொடர்பில் அவர் கூறுகையில், "மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற எடுக்கக்கூடிய ஒரே நடவடிக்கை வரவு - செலவு திட்டம் அல்ல. மேலும் தொடக்க வரவு - செலவு திட்டம் இதை நிவர்த்தி செய்வதற்கான ஒரே கருவியும் அல்ல.
பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பாதைக்கு அடித்தளம் அமைப்பதே இந்த வரவு - செலவு திட்டம் " என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தேவையற்ற பொருட்களிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட வரியை (VAT) நீக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அனில் ஜெயந்த பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, "IMF ஒப்பந்தம் நடைமுறையில் இல்லாவிட்டால் தொடக்க வரவு - செலவு திட்டத்தில் வரியை நீக்கியிருக்கலாம். ஆட்சிக்கு வந்த பிறகுதான் IMF உடனான நடவடிக்கை குறித்து நாங்கள் முடிவு செய்ய முடிந்தது" என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ, அரசாங்கம் அதன் தொடக்க வரவு - செலவு திட்டத்தில் வரிகளை நீக்க நினைத்தது, இருப்பினும் அதைச் செய்ய முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |