ஆயிரக்கணக்கான அரச பணி ஓய்வூதியதாரர்களுக்கு சிக்கல்!
அரச பணி ஓய்வூதியதாரர்களில் 34000 மேற்பட்டோர் கடுமையான பொருளாதார பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய ஆசிரியர் மற்றும் அதிபர் அமைப்பின் தேசிய அமைப்பாளர் ஜி. ஐ. என். பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி, அரச பணி ஓய்வூதியதாரர்களின் மொத்த எண்ணிக்கை 130,000 இற்கும் அதிகமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஓய்வூதிய வகைப்பாட்டின் மாத சம்பளம்
ஓய்வூதிய வகைப்பாட்டின்படி, மாதச்சம்பளம் ரூ. 20,000-க்கும் குறைவாகப் பெறுபவர்களின் எண்ணிக்கை 34,764 ஆகும்.

ரூ. 20,000-30,000 வரை சம்பளம் பெறுபவர்களின் எண்ணிக்கை 107,382 ஆகவும், ரூ. 30,000-40,000 வரை சம்பளம் பெறுபவர்களின் எண்ணிக்கை 206,865 ஆகவும், மேலும் ரூ. 40,000-50,000 வரை சம்பளம் பெறுபவர்களின் எண்ணிக்கை 160393 ஆகும்.
மேலும் ரூ. 50,000 முதல் ரூ. 70,000 வரை ஓய்வூதியம் பெறத் தகுதியுள்ளவர்களின் எண்ணிக்கை 176236 என்றும் கூறப்படுகின்றது.
ரூ. 70,000-க்கு மேல் ஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை 44794 என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை, ரூ. 20,000-க்கும் குறைவாக சம்பளம் பெறும் ஓய்வூதியதாரர்களின் சதவீதம், ஓய்வு பெற்ற சமூகத்தில் 4.8 சதவீதம் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார்.
காவி உடையை காப்பாற்ற போராடிய ஞானசார தேரர்...! இறுதியில் மின் விசிறியில் தொங்கிய ஆடை - மீண்டும் எழுந்துள்ள சர்ச்சை