பலாங்கொடை கஸ்ஸப தேரர் விவகாரம்! பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை
பலாங்கொடை கஸ்ஸப தேரர் பொலிசாரினால் தாக்கப்பட்டதாக வெளியிடப்படும் அல்லது பரப்பப்படும் போலியான தகவல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிசார் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யூ. வுட்லர் காணொளி வாயிலான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
பொலிஸாருடன் முரண்பாடு
ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்திக் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் மீது பொலிசார் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது.
அவர் மீது பொலிசார் ஒருபோதும் தாக்குதல் மேற்கொள்ளவில்லை. போராட்டக்காரர்கள் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தவும் தற்காலிகக் கூடாரம் அமைக்கவும் முயன்றபோது பொலிஸாருடன் முரண்பாடு ஏற்பட்டது.

இதன்போது கஸ்ஸப தேரர் கொங்கிரீட் படிக்கட்டில் கால் தவறி விழுந்ததாகத் தெரிய வந்துள்ளது. ஆனால் பொலிஸார் தாக்கியதாகப் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டிய போதும் அவ்வாறான சம்பவங்கள் நடைபெறவில்லை.
அதே நேரம் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் போலியான தகவல்களைப் பரப்புவோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிப்போர் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தொடர்ந்தும் எச்சரித்துள்ளார்.
விஹாரமஹாதேவி பூங்காவில் ஏற்பட்ட பதற்ற நிலை! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கஸ்ஸப தேரர் வெளியேறினார்..