அநுரவிடம் தோற்றுப்போன பௌத்தம் : 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றம் - அவமானத்தில் சண்டியர்கள்
சமகால அரசாங்கத்தை வீழ்த்த முன்னெடுக்கப்பட்ட முதல் முயற்சி பாரிய தோல்வியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், அதனை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திறமையாக கையாண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை மீட்கும் முயற்சியில் பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக கண்டியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம், கொழும்பில் பரபரப்பான நிலையை ஏற்படுத்தியதுடன் 24 மணிநேரத்தில் புஷ்வாணமாக மாறியுள்ளது.
மாபியா கும்பல்கள்
இந்தப் போராட்டம் வெறுமனே ஞானசார தேரரை காப்பாறுவது மட்டுமன்றி, அநுர அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்து, அவர்களுக்கு எதிராக மக்களை திசை திருப்புவதாகவும் அமைந்திருந்தது.
இதன் பின்னணியில் ராஜபக்சர்கள் உட்பட பல்வேறு மாபியா கும்பல்கள் செயற்பட்டு வருகின்றனர்.
தற்போதைய போராட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ள போதிலும், மாற்று வழிகளில் அதனை ஊதிப் பெரிதாக்க தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இனவாதம் ஒன்றை மட்டும் அடிப்படையாக வைத்து இதுவரை ஆட்சியாளர்கள் தமது அரசியல் நிலையை தக்க வைத்திருந்தனர். இதில் ராஜபக்சர்கள் பெருமளவில் வெற்றி கண்டிருந்தனர்.
இதுவரை தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக அடக்குமுறைகளை பிரயோகித்து, தம்மை பௌத்த மதத்தின் பாதுகாவலர்கள் என கடந்த ஆட்சியாளர்கள் வெளிப்படுத்தி வந்தனர்.
எனினும் இம்முறை மாறுட்பட வகையில் பௌத்தர்களுக்குள் பிளவுகளாக பிரிந்து அவர்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமான நிலையை அடைந்துள்ளது.
மக்கள் மத்தியில் பாரிய கொதிநிலை
பௌத்த மக்கள் மத்தியில் பாரிய கொதிநிலையை ஏற்படுத்தும் வகையில், ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

காலிமுகத்திடல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னிலையில் ஒன்றுகூடிய பிக்குமாருடன் சில குழுவினர்கள் ஆரம்பத்தில் ஒன்றுகூடியிருந்தாலும் சில மணிநேரங்களில் அவர்களும் அங்கிருந்து கலைந்து சென்ற நிலையில், சிறு குழுவிலான தேரர்கள் மட்டும் தமது எதிர்ப்பை வெளிபிட்டனர்.
எதிர்பார்த்த மக்களின் ஆதரவோ அல்லது பௌத்த துறவிகளின் ஆதரவோ இந்தப் போராட்டத்திற்கு கிடைக்கவில்லை. குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவருக்காக ஒன்றுகூட மக்கள் விரும்பவில்லை என்பதை நிரூபித்துள்ளனர்.
செங்கம்பளம் விரித்து வரவேற்பு வழங்கப்படும் என எதிர்பார்த்த பிக்குமாரை பொலிஸார் விரட்டியடித்த சம்பவம் இந்த போராட்டத்தின் பின்னணியில் செயற்பட்ட ராஜபக்ச மற்றும் மாபியா கும்பலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேரர்களுக்கு எதிரான போராட்டத்தை எவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கையாளப் போகிறார் என பலரும் காத்திருந்த நிலையில், சட்டத்தின் முன் அனைவரும் சமன், நீதிமன்ற சட்டங்களை மதித்து அவரவர் வேலைகளை பார்க்குமாறு ஜனாதிபதி கடுமையான உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
தேரர்கள் தொடர்பில் தீர்மானங்கள் எட்டப்பட வேண்டுமாயின், சட்டத்திற்கு அமைவாக அதனை விரிவுபடுத்த முயற்சி செய்யலாம் என ஜனாதிபதி உறுதியாக அறிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் பெருத்த அவமானத்துடனும் தோல்வியுடனும் ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் இருந்து கலைந்து சென்ற தேரர் கும்பல், ஆங்காங்கே சில இடங்களில் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அங்கிருந்தும் அவர்கள் தொடர்ச்சியாக விரட்டியடிக்கப்பட்டு வருகின்றனர்.
அரசாங்கத்திற்கு ஆதரவாக மக்கள்
இந்நிலையில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக போராடுவர்களுக்கு எதிராக மக்களும் களமிறங்கி அவர்களுக்கு எதிராக கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இது அநுர அரசாங்கத்தின் நேர்த்தியான செயற்பாட்டுக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த உத்வேகத்துடன் அடுத்து வரும் நாட்களிலும் பல அதிரடிகளும் கைதுகளும், தீர்ப்புகளும் இடம்பெறலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam