விஹாரமஹாதேவி பூங்காவில் ஏற்பட்ட பதற்ற நிலை! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கஸ்ஸப தேரர் வெளியேறினார்..
புதிய இணைப்பு
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.
கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை தாக்கப்பட்டதாகக் கூறி கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கஸ்ஸப தேரர் தனது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் மருத்துவமனையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளதாக அறிய முடிகின்றது.
முதலாம் இணைப்பு
கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலங்கொட கஸ்ஸப தேரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேரர் மீது பொலிஸாரினால் தாக்குதல்
சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையின் போது தேரர் மீது பொலிஸாரினால் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அத்தகைய தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை என்று குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுவசெரிய அவசர அம்புலன்ஸ் வண்டி மூலமாக கஸ்ஸப தேரரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan