தமிழரசு கட்சி மீது பாரிய குற்றச்சாட்டை சுமத்திய அரசாங்கம்
தமிழரசுக் கட்சி தேர்தல் காலத்தில் வாக்குக்காக கசிப்பு வழங்கியதாக சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(08.05.2025) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“தமிழரசுக் கட்சி வாக்குகளை பெறுவதற்காக கசிப்பு வழங்கினார்கள். அத்துடன், மக்களுக்கு பணத்தையும் வழங்கினார்கள். மேலும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இனவாத கருத்துக்களை பயன்படுத்தினர்.
தூய்மையான அரசியல்
அவை கூறுவதற்கு தகுந்த வார்தைகள் அல்ல என்ற காரணத்தினால் நான் அவற்றை இங்கு சுட்டிக்காட்ட விரும்பவில்லை.
நாங்கள் நினைத்திருந்தால் எங்களாலும் பணத்தை வழங்கியிருக்க முடியும். ஆனால், நாங்கள் அதனை செய்யவில்லை.
எனினும், தூய்மையான அரசியலை செய்து நாங்கள் வவுனியாவிலும் மன்னாரிலும் வெற்றி பெற்றுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
