அரச ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு! ரணில் ஒதுக்கிய பணம் தொடர்பில் விளக்கம்
2024 ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் அரச ஊழியர்களுக்கு நான் பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்புக்காக நிதி ஒதுக்கினேன் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சம்பள அதிகரிப்பு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்குமாறு பாரிய பாேராட்டம் இடம்பெற்றது. தேசிய மக்கள் சக்தியினால் பணி பகிஷ்கரிப்பு போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன.
அதற்கு முன்னர் அரச ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபா வழங்கி இருந்தேன். பின்னர் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் உதய செனவிரத்ன குழு அறிக்கையின் பிரகாரம் இரண்டு கட்டங்களாக சம்பள அதிகரிப்பு வழங்க திறைசேரி இணக்கம் தெரிவித்தது.
2025ஆம் ஆண்டு செலவழிக்கும் நிதி தொடர்பில் நாணய நிதியத்தின் குழுவுக்கு அறிவிக்க வேண்டி இருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நூற்றுக்கு 13வீதம்வரை எமது செலவு வரையறுக்கப்பட்டது.
நாங்கள் செலவிடும் அனைத்து செலவுகள் தொடர்பாகவும் அவர்களுக்கு அறிவிக்க வேண்டும். அதன் பிரகாரம் நாங்கள் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பும் செலவு பட்டியலில் உள்வாங்கி இருந்தோம்.
ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு
அதனாலே அமைச்சரவையில் தீர்மானம் எடுக்க வேண்டி ஏற்பட்டது. வரவு செலவுக்கான செலவு வரையறை என்ன என்பதை நாணய நிதியத்துக்கு காட்டவேண்டி இருக்கிறது.
ஆனால் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புக்கு நான் நிதி ஒதுக்கி இருக்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். நிதி ஒதுக்குவது 2025 ஒதுக்கீட்டு சட்டமூலத்திலாகும். 2024 ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் 2025ஆம் ஆண்டுக்காக நிதி ஒதுக்க முடியாது. அது தெரியாதா?
2024 ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் நான் பத்தாயிரரும் ரூபா சம்பள அதிகரிப்புக்காக நிதி ஒதுக்கினேன். 2025ஆம் ஆண்டு ஒதுக்கீட்டு சட்டமூத்துக்கு சமர்ப்பிக்கவே நாங்கள் இந்தமுறை சம்பள அதிகரிப்பு தயாரித்தோம். அதனால் இந்த சம்பள அதிகரிப்பு தீர்மானம் இருக்கும்வரை அதனை வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்க வேண்டும்.
நாங்கள் எடுத்த தீர்மானம் பிழை என்றால் அதனை நீக்கவும். தற்போதைய ஜனாதிபதிக்கு அதற்கான அதிகாரம் இருக்கிறது. அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தி இருப்பதாக தற்பாேது அவர்கள் தெரிவிக்கின்றனர். அது தேவையில்லை. நாங்கள் அமைச்சரவை தீர்மானம் ஒன்றை எடுத்திருக்கிறோம். அதனை செயற்படுத்த வேண்டும்.
எனவே இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடுவது அரசாங்கத்தை பெற்றுக்கொண்டு இந்த விடயங்களை முன்னெடுத்துச் செல்வதற்காகும் என குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam
