சிறைச்சாலைகளாக மாற்றமடையும் இரு அரசாங்க கட்டடங்கள்
அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு கட்டடங்களை சிறைச்சாலைகளாக மாற்றுவதற்கு நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
சிறைச்சாலைகளில் காணப்படும் இட நெருக்கடிக்கு தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தற்போது 32 ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகள் சிறைச்சாலையில் உள்ளதுடன், 13,000 கைதிகளுக்கு போதுமான இடவசதி மட்டுமே சிறைச்சாலைகளில் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இட நெருக்கடி
இதற்கமைய, ஹெந்தலையிலுள்ள தொழுநோயாளர் வைத்தியசாலையின் சில கட்டடங்களும், மட்டக்களப்பில் அமைந்துள்ள பழைய வைத்தியசாலை கட்டடமும் இதற்காக பயன்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் சுகாதார அமைச்சுடன் ஏற்கனவே கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழினத்தின் எலும்புக்கூடுகள் எம்மை வழிநடத்தட்டும் 8 நிமிடங்கள் முன்

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
