விபத்தில் பலியான இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஜீப் வண்டி சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், பாரவூர்தியின் சாரதியை பிணையில் விடுவிக்கவும் வெலிசர நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் உயிரிழந்திருந்தனர்.
சென்னையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பவதாரணியின் உடல் : ஒன்று திரளும் திரைப் பிரபலங்கள்

இறுதிக்கிரியைகள்
கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கொள்கலன் பாரவூர்தியை முந்திச் செல்ல முற்பட்ட போது, ஜீப் வண்டி பாரவூர்தியின் பின்புறம் மோதி பின்னர் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியிருந்தது.

இந்த விபத்தில் சிக்குண்டு உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் உடல் புத்தளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதேவேளை, சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்ட சனத் நிஷாந்தவின் உடல் : வீதியின் இரு மருங்கிலும் காத்திருந்த மக்கள்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam