அரசாங்கத்தின் உதவி திட்டம்! கொட்டும் மழையிலும் குவிந்த மக்கள்
நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையையும் பொருட்படுத்தாமல், அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள பெருமளவான மக்கள் நுவரெலியா பிரதேச செயலகத்தில் குவிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான புதிய பயனாளிகளைத் தெரிவு செய்வதற்காக, புதிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் நுவரெலியா பிரதேச செயலகத்தில் நேற்று முதற்தடவையாக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள்
இதன் காரணமாக, பெருமளவான மக்கள் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள வருகை தந்ததாக நுவரெலியா பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

மேலும், பெருமளவான மக்கள் கூட்டத்தைச் சமாளிக்க, டோக்கன் கொடுக்கப்பட்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு அந்த இடத்திலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் வாரத்தின் திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நுவரெலியா பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri