சுஜீவவின் வாகனம் தொடர்பில் இன்னும் அரச பகுப்பாய்வு அறிக்கை கிடைக்கவில்லை
சட்டவிரோதமாக பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொகுசு வாகனம் தொடர்பான பகுப்பாய்வாளரின் அறிக்கை நீதிமன்றத்திற்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
இதனையடுத்து, அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றை வழங்குமாறு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி, இன்று உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில், இன்று சுஜீவ சேனசிங்க சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, வாகனம் தொடர்பில் செட்டிகுளம் நீதிமன்றில் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்னர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்த போதிலும், குறித்த வழக்கு ஏற்கனவே முடிவுக்கு வந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச பகுப்பாய்வாளரின் அறிக்கை
எனவே, தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த வாகனத்தை சுஜீவ சேனசிங்கவிடம் விடுவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த கோட்டை நீதவான், அரச பகுப்பாய்வாளரின் அறிக்கை இன்னமும் நீதிமன்றத்திற்கு கிடைக்கப்பெறாத காரணத்தினால் வழக்கை நவம்பர் 25ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan
