ஜனாதிபதி அநுரவை சந்தித்த ஐ.எம்.எப் பிரதிநிதிகள் குழு
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பானது இன்று (18) இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது, இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.
சமநிலையான அணுகுமுறை
அத்தோடு, மக்களின் பிரச்சினைகளை தீர்த்து, மக்களின் நம்பிக்கையை நிலைநாட்டக்கூடிய சமநிலையான அணுகுமுறையின் அவசியத்தை தாம் எடுத்துரைத்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர் வறுமை மற்றும் ஊட்டச் சத்து குறைபாட்டைத் தீர்ப்பது, விசேட தேவையுடையோருக்கு ஆதரவளிப்பது மற்றும் கடுமையான சீர்திருத்தங்களின் ஊடாக ஊழலுக்கு எதிராகப் போராடுவது என்பன தமது இலக்குகளாகும் என ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri
