உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பிரதமர் ஹரிணி
இலங்கையின் 17ஆவது பிரதமராக ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) இன்றையதினம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
பிரதமராக, ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பிரதமர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அமைச்சுப் பொறுப்புக்கள்
புதிய அரசாங்கத்தின் 21 பேர் கொண்ட அமைச்சரவை இன்று முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது.
புதிய அரசாங்கத்தின் பிரதமராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள ஹரிணி அமரசூரிய கொழும்பு மாவட்டத்தில் இருந்து அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானவராவார்.
655,289 விருப்பு வாக்குகளை அவர் பெற்றுக் கொண்டிருந்தார்.
மேலும், பிரதமர் ஹரிணி அமரசூரியகல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.








சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
