அமெரிக்க மற்றும் சீனா இடையில் மீண்டும் இராணுவத் தொடர்பு..!
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையில் மீண்டும் இராணுவத் தொடர்புகளை தொடங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மலேசியாவில் நடைபெற்ற பிராந்திய உச்சி மாநாட்டின் போது அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் பாதுகாப்பு அமைச்சர் டொங் ஜுன்னை சந்தித்த போது, இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்புக்கு முன்னதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் தென் கொரியாவில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
சமநிலை மற்றும் மதிப்பீடு
இவ்வாறிருக்க, இரு நாடுகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய இராணுவ ஒப்பந்தத்தில், எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கவும், தணிக்கவும் இரு நாட்டு இராணுவங்களுக்கு இடையிலான தொடர்பு வழிகளை உருவாக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தனது x கணக்கில் பதிவொன்றை இட்ட ஹெக்செத், 'இரு மகத்தான நாடுகளுக்கிடையே அமைதி, நிலைத்தன்மை மற்றும் நல்ல உறவுகள் தான் சிறந்த பாதை' எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நம்பிக்கையை வளர்க்கவும், சந்தேகங்களை நீக்கவும், சமநிலை மற்றும் மதிப்பீடு அடிப்படையிலான இராணுவ உறவுகளை கட்டமைக்க வேண்டும் என சீன பாதுகாப்பு அமைச்சகம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam