கரைபுரண்டு ஓடும் கோட்டாபயவின் சௌபாக்கியம்! உச்சக்கட்ட கோபத்தில் இலங்கை மக்கள்
சௌபாக்கிய நோக்கின் மூலம் ஜனாதிபதி நாட்டை பசி, இருள் வரிசைகளுக்கு ஓடும் நாடாக மாற்றியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கை பொருளாதாரம், சமூகம், அரசியல் என சகல நெருக்கடிகளால் வைசாலி நகரமாக மாறியுள்ளது. அரசாங்கத்திற்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை என்பதை ஏற்றுக்கொண்டு, பதவி விலகி, பிரச்சினைகளை தீர்க்க கூடிய தலைவரை தெரிவு செய்ய மக்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.
நிலவும் பொருளாதார நிலைமையில், மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அத்தியவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், மக்கள் வயது வித்தியாசமின்றி வரிசைகளில் நிற்க நேரிட்டுள்ளது.
எமது நாட்டின் வயது முதிர்ந்த மக்களின் குறிப்பிடத்தக்களவினர் வரிசைகளில் நிற்கின்றனர். இவர்கள் நோய்களுக்காக அடிக்கடி சிகிச்சை பெறும் நபர்கள். குடும்பங்களின் தேவைக்காக பலருக்கு வரிசைகளில் நிற்க நேரிட்டுள்ளது.
வரிசைகளில் நின்ற மூன்று பேர் ஏற்கனவே மரணித்துள்ளனர். இவ்விதமாகவே கோட்டாபய ராஜபக்ச நாட்டுக்கு சௌபாக்கியத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்.
பொருளாதார பிரச்சினைகள் உக்கிரமடையும் போது மக்கள் மத்தியில் பல்வேறு வகையில் கோபம் வெடித்து கிளம்பும். இப்படியான கோபங்கள் சமூக நெருக்கடியாக மாறலாம். எனினும் எமது நாட்டில் அதன் எல்லை தாண்டியுள்ளது.
இதனால், நாட்டின் பிரச்சினைக்கு என்ன தீர்வு அவசியம் என்பதை சமூக விஞ்ஞானிகள் முன்வைக்க வேண்டிய காலம் வந்துள்ளது. வரிசைகளில் நிற்கும் மக்கள் இறந்து விழும் போது ஜனாதிபதி எவ்வித உணர்வுமின்றி இருக்கின்றார்.
ஜனாதிபதி, பிரதமர் உட்பட அமைச்சரவையினர் விதண்டா வாதங்களை பேசி வெற்று வார்த்தைகளை பயன்படுத்தி வருகின்றனர் எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam