நாடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு விமான நிலையத்தில் நடத்தப்படும் பிசிஆர் சோதனைக்கான கட்டணத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva) இதனை தெரிவித்துள்ளார். அமைச்சில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாதுறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga), வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன (Piyankara Jayaratne) மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர்,
வெளிநாட்டில் பணிபுரியும் போது நம் நாட்டிற்கு அந்நிய செலாவணி ஈட்டி தந்த புலம்பெயல் தொழிலாளர்கள் மீதான பிசிஆர் சோதனைகள் விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ள புதிய ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் கூறினார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சேவையை அங்கீகரிக்கும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பிசிஆர் சோதனைகளுக்கு 40 டொலர் செலுத்த முடிவு செய்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பிசிஆர் சோதனை நடத்தி மூன்று மணி நேரத்திற்குள் தொழிலாளர்கள் வீடு திரும்புவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என குறிப்பிட்டார்.
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சோதனையின் போது தொற்று ஏற்படவில்லை என்றால் வீடு திரும்பு வாய்ப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.





தீபாவளி பரிசாக வந்த விவாகரத்து நோட்டீஸ்.. சின்ன மருமகள் நடிகையின் அதிரடி- கணவர் உடைத்த ரகசியம் Manithan

தயார் நிலையில் இராணுவம்... ஜனாதிபதிக்கு எதிராக நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகும் மக்கள் News Lankasri

பார்கவி-தர்ஷனுக்கு தல தீபாவளி ஏற்பாடு செய்யும் நந்தினி, ஆனால்?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
