திணறிக் கொண்டிருந்த இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து கிடைத்த அதிர்ஷ்டம்!
கஷ்டமான காலத்தில் இலங்கைக்கு இந்தியாவிடம் இருந்து நிதியுதவி கிடைத்தமை அதிர்ஷ்டமானது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியா இப்படியான உதவியை வழங்கியது இதுவே முதல் முறை என்பதால், அது முக்கியமானது. இதனால், அந்த உதவி பற்றி தெரிவிக்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
இந்தியாவின் இந்த உதவி தொடர்பாக நாட்டில் பல கதைகள் பரவி வருகின்றன. இதனால், வெளிவிவகார அமைச்சரோ, நிதியமைச்சரோ இந்த விடயம் தொடர்பாக தெளிவுப்படுத்த வேண்டியது அவர்களின் முக்கிய கடமை.
கஷ்டமான சந்தர்ப்பத்தில் நாட்டுக்கு உதவி செய்த பங்களாதேஷ் நாட்டுக்கும் நன்றியை தெரிவிப்பதாகவும் ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளார்.
இலங்கை தற்போது அந்நியச் செலாவணி இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமலும், எரிபொருட்களின் தட்டுப்பாட்டை தடுக்க முடியாமலும் இலங்கை திணறிக் கொண்டிருந்த நேரத்தில் இந்தியா கடன் உதவி கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam