விடுதலைப்புலிகளின் தங்கம்! சிக்குவாரா பசில் - வாய் திறப்பாரா பொன்சேகா...
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிப் போரின் போது இராணுவத்தால் மீட்கப்பட்டதாகக் கூறப்படும் தங்கம் மற்றும் நகைகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் பல ஆண்டுகளாக கேள்வி இருந்து வந்தது.
இந்நிலையில் இறுதிப் போரின் போது இராணுவத்தால் மீட்கப்பட்டதாக கூறப்பட்ட ஒரு தொகை தங்கத்தை தற்போதைய இலங்கை அரசாங்கம் இராணுவத்திடம் இருந்து பெற்று அதனை பொலிஸ் தரப்பிடம் ஒப்படைத்தது.
இந்தப் பொருட்கள் மதிப்பீட்டிற்காக தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணையம் வழியாக இலங்கை மத்திய வங்கிக்கு மாற்றப்படும் என கூறப்பட்டது.
மேலும், ஆபரணங்களை அவற்றின் அடையாளங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் அவற்றின் உரிமையாளர்களிடம் திருப்பித் தருவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடனான இறுதிப்போரின் பின்னர் 110 கிலோகிராம் தங்கம் மற்றும் நகைகள் மீட்கப்பட்டமையை 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற ஒரு நாடாளுமன்ற அமர்வில் அரசாங்கத்தின் அப்போதைய தலைமை கொறடா, தினேஷ் குணவர்தன வெளிப்படுத்தியிருந்தார்.
மதிப்புமிக்க பொருட்களை எந்தவொரு நபரிடமோ அல்லது நிறுவனத்திடமோ ஒப்படைக்க முடியாது என அவர் இதன்போது கூறியிருந்தார்.
எனவே, தேவையான சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன, மேலும் தங்கம் மற்றும் நகைகள் இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்படும் பணியில் ஈடுபட்டுள்ளன என அவர் கூறியிருந்தமையை இங்கு நினைவில்கொள்ள வேண்டும்.
இதன்படி தற்போது 16 வருடங்களின் பின்னர் குறித்த தங்கம் தொடர்பிலான தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், அப்போதைய அமைச்சரவையில் பிரதான அமைச்சராக இருந்த பசில் மீதான ஒரு சட்ட நடவடிக்கைக்கு இட்டு செல்லும் என்ற எதிர்விணையை வெளிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தங்கம் தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்களையும் அதனுடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவாக ஆராய்கிறது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
