தேசிய மக்கள் சக்தியின் இறுதிக்கட்ட பிரசாரப் பணிகளில் இருந்து விலகிய ஜனாதிபதி
தேசிய மக்கள் சக்தியின் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரப் பணிகளில் இருந்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க விலகிக் கொண்டுள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரசாரப் பணிகளில் தேசிய மக்கள் சக்தி சார்பில் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற பல்வேறு பிரச்சாரக்கூட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிநாளான இன்றைய தினம் தேசிய மக்கள் சக்தி சார்பில் நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரச்சாரக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவற்றில் கலந்து கொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிப் பிரசாரக்கூட்டம் இல்லை
அத்துடன் தேர்தல் பிரசாரப் பணிகளை நிறைவுசெய்யும் வகையிலான இறுதிப்பிரச்சாரக் கூட்டமொன்றை நடத்தும் வழக்கத்தையும் தேசிய மக்கள் சக்தி இம்முறை கைவிட்டுள்ளது.
அதன் பிரகாரம் தேசிய மக்கள் சக்தி சார்பில் இறுதிப் பிரசாரக்கூட்டம் எதுவும் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
