தங்கத்தை விழுங்கி பொலிஸாரை குழப்பத்தில் ஆழ்த்திய கொள்ளையன்
கம்பஹா, ஒருதொட்ட வீதியில் பயணித்த பெண்ணிடமிருந்து தங்க நகையை திருடி, அதனை விழுங்கிய நபர் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த நபர் விசாரணையின் போது அதனை விழுங்கியுள்ளதாக யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண்களின் தங்க நகையை பறித்து செல்ல முயற்சித்துள்ளனர்.
கொள்ளையன்
இதன் போது அருகில் இருந்தவர்கள் சுற்றி வளைத்துள்ளனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், நகையை வைத்திருந்த கொள்ளையன் அதனை விழுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தங்க நகை
யக்கல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அதுல கமகேவின் பணிப்புரையின் பேரில் பொலிஸ் பரிசோதகர் சரத் பண்டார உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் அந்த நகையை வெளியில் எடுப்பதற்காக சந்தேக நபரை கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.