குற்றத்தை ஒப்புக்கொண்ட ஞானசார தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட தரப்பினரை நட்டஈடு செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டில் கொழும்பு நிப்பான் ஹோட்டலில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டை ஞானசார தேரர் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஜாதிக்க பல சேனா இயக்கத்தின் தலைவர் வட்டரக்க விஜித்த தேரரினால் இந்த ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
இந்த ஊடக சந்திப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து இடையூறு விளைவித்தனர் என ஞானசார தேரர் உள்ளிட்ட தரப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
குற்றத்தை ஒப்புக்கொண்ட ஞானசார தேரர் மற்றும் அவருடன் ஊடக சந்திப்பிற்குள் பிரவேசித்த தரப்பினரை நீதிமன்றம் 3 இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.
பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
முறைப்பாடு செய்த தரப்பினருக்கு இந்த நட்டஈட்டை வழங்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இவ்வாறான குற்றச்செயல்களை மீண்டும் இழைக்கக்கூடாது என நீதவான் அறிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த வழக்கில் சுமத்தப்பட்டிருந்த மற்றுமொரு குற்றச்சாட்டு தொடர்பில் இரு தரப்பினரும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சனல் 4 வெளிப்படுத்தியிருக்கும் புதிய தகவல்கள்: பிரதான சூத்திரதாரிகள் யார் என்பது அம்பலம் - ஹக்கீம் தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |