லண்டனில் பாடசாலை சென்ற மாணவிக்கு நேர்ந்த துயரம்: சந்தேகநபர் தப்பியோட்டம்
பிரித்தானியாவில் பாடசாலைக்கு செல்லும் வழியில் 15 வயது மாணவியை சிறுவன் ஒருவன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு லண்டனின் க்ராய்டன்(Croydon) பகுதியில் உள்ள விட்கிஃப்ட்(Whitgift) அருகில் 15 வயது மாணவி ஒருவர் பாடசாலைக்கு செல்லும் வழியில் 17 வயது டீன் ஏஜ் சிறுவன் ஒருவனால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
வெல்லஸ்லி(Wellesley ) சாலையில் நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸார் மற்றும் அவசர குழுவினர் மாணவியின் உயிரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் சம்பவம்
இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,
'' மாணவி கத்தியால் கழுத்தில் குத்தப்பட்டு பேருந்துக்கு அருகே சரிந்து விழுந்த உடனே பேருந்து சாரதி மற்றும் பிற பயணிகள் மாணவியை காப்பாற்ற விரைந்துள்ளனர்.
காலை 8.30 மணியளவில் இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்த நிலையில், காலை 9.20 மணி அளவில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் வழங்கிய தகவலின் படி, பாதிக்கப்பட்ட மாணவியும், தாக்குதலை மேற்கொண்ட சிறுவனும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் எனவும், எனவே தாக்குதலுக்கான காரணம் குறித்து கைது செய்யப்பட்ட சிறுவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கத்திக்குத்துக்கு ஆளான மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan
