சாதாரண தரப் பரீட்சை! யாழ். இந்துக் கல்லூரி பெற்றுக்கொண்டுள்ள உயர் பெறுபேறுகள்
2023ஆம் கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன.
நாடளாவிய ரீதியில் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட மாணவர்களது விபரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன.
சிறந்த பெறுபேறுகள்
இந்த நிலையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவர்கள் இந்த வருடமும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
இதன்படி, யாழ். இந்துக் கல்லூரியில் 9ஏ சித்திகளை 52 மாணவர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர். இவர்களுள் ஆங்கில மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றிய 24 மாணவர்களும், தமிழ் மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றிய 28 மாணவர்களும் உள்ளடங்குவர்.
மேலும், 8ஏ சித்திகளை 62 மாணவர்கள் பெற்றுக்கொண்டுள்ளதுடன், அதில் 22 மாணவர்கள் ஆங்கில மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றியவர்கள் என்பதுடன், 40 மாணவர்கள் தமிழ் மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றியவர்கள் ஆவர்.
இதேவேளை, 7ஏ சித்திகளை 43 மாணவர்கள் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவர்கள் 29 பேரும், ஆங்கில மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றிய 14 மாணவர்களும் உள்ளடங்குவர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
