போரை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது: நெதன்யாகு திட்டவட்டம்
காசாவில் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சா்வதேச அளவில் நிா்பந்தம் அதிகரித்து வரும் சூழலில், அங்கு நடைபெற்று வரும் போரை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளாா்.
இது தொடர்பில் இஸ்ரேல் பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள காணொளியில் அவா் பேசியதாவது,
ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக் கட்டுவதற்கான இந்தப் போா் இறுதி வரை தொடரும்.
சர்வதேச நிா்பந்தம்
இதை நிறுத்துவது என்ற பேச்சுக்கு இங்கு இடமில்லை.
போரில் நமக்கு ஏற்படும் இழப்புகள் மற்றும், சர்வதேச நிா்பந்தங்கள் ஆகியவை தொடர்பான அழுத்தங்கள் அதிகரித்தாலும் காசாவில் மீதான தாக்குதல் நிறுத்தப்படமாட்டாது.
இறுதி வெற்றி கிடைக்கும்வரை போா் தொடரும். அதை மீறிய எந்தத் தீா்வும் ஏற்கப்படாது” என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
