கைத்தொலைபேசிகளை திருடி விற்பனை செய்து வந்த கும்பல் சிக்கியுள்ளது

Sri Lanka Police Ampara Eastern Province
By Farook Sihan Jul 25, 2023 12:33 PM GMT
Report

நீண்ட காலமாக கைத்தொலைபேசிகளை திருடி விற்பனை செய்து வந்த கும்பல் கல்முனை தலைமையக பொலிஸாரிடம் சிக்கியுள்ளது.

பொலிஸ் குழுவினரால் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேக நபர்களை பொலிஸ் விசேட பிரிவின் தகவல் ஒருங்கிணைப்பிற்கமைய நேற்று(24.07.2023) கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் தொலைபேசிகள் சூட்சுமமாக களவாடி செல்லப்பட்டுள்ளதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள்

கைத்தொலைபேசிகளை திருடி விற்பனை செய்து வந்த கும்பல் சிக்கியுள்ளது | Gang Was Caught Stealing Selling Mobile Phones

இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல்.பத்திக வழிநடத்தலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்ஷீன் பக்கீர் ஆலோசனையில் கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் தலைமையில் சென்றிருந்தனர்.

இந் நடவடிக்கையில் கைதாகிய 2 சந்தேக நபர்களும் தடுத்து வைக்கப்பட்டு ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸாரினால் விசாரணைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்விசாரணையின் போது கைதானவர்களின் வாக்குமூலத்தின் படி வைத்தியசாலை நோயாளிகள், பார்வையாளர்கள் ஆகியோரை பிரதானமாக இலக்கு வைத்து சக நோயாளர்களாகவும் சிற்றுழியர்களாகவும் நடித்து சூட்சுமமாக இக்கைத்தொலைபேசிகளை திருடியுள்ளனர்.

கைதானவர்கள் விபரம்

கைத்தொலைபேசிகளை திருடி விற்பனை செய்து வந்த கும்பல் சிக்கியுள்ளது | Gang Was Caught Stealing Selling Mobile Phones

மேலும் குறித்த திருட்டு சம்பவத்தின் தலைவராக 32 வயதுடைய சந்தேக நபர் செயற்பட்டு வந்துள்ளதுடன் கல்முனை புறநகர் பகுதியில் ஆசிரியர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து இத் திருட்டு குழுவை வழிநடத்தியுள்ளார்.

மற்றைய சந்தேக நபர் கல்முனை மாநகரில் கைத்தொலைபேசி கடையை நடாத்தி வருபவராவார்.

இவர் 39 வயது மதிக்க தக்கவர் என்பதுடன் குறித்த கைத்தொலைபேசி திருட்டு கும்பலினால் களவாடப்பட்டு வருகின்ற கைத்தொலைபேசிகளை கொள்வனவு செய்து விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

தொலைபேசிகளின் பெறுமதி

கைத்தொலைபேசிகளை திருடி விற்பனை செய்து வந்த கும்பல் சிக்கியுள்ளது | Gang Was Caught Stealing Selling Mobile Phones

இது தவிர குறித்த சந்தேக நபர்கள் பொது இடங்கள்,கல்முனை பிரதான பேருந்து நிலையம் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்பவர்களையும் இலக்கு வைத்து இத்திருட்டை சாதுரியமாக மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மண்டூர், நிந்தவூர், சம்மாந்துறை, கல்முனை, நற்பிட்டிமுனை பகுதியை சேர்ந்தவர்கள் இக்கைத்தொலைபேசி திருட்டினால் தமது பெருமதியான கைத்தொலைபேசிகளை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் பொலிஸாரினால் தற்போது கைப்பற்றப்பட்டள்ள தொலைபேசிகளின் பெறுமதி ரூபா 5 இலட்சத்திற்கும் மேல் பெறுமதியானவை என்பதுடன் சில கைத்தொலைபேசிகளின் உரிமையாளர்கள் தத்தமது தொலைபேசிகளை இனங்கண்டும் வருகின்றனர்.

எனவே பொதுமக்கள் கடந்த காலங்களில் கைத்தொலைபேசிகளை தொலைத்திருந்தால் தம்மை தொடர்பு கொள்ளுமாறு கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் கேட்டுள்ளார்.

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US