குறி வைக்கப்படும் வங்கி கணக்குகள்! பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு (AI) அல்லது எடிட்டிங் கருவிகளைப் பயன்படுத்தி போலியான கட்டண ரசீதுகளை உருவாக்கி, உண்மையான பணம் செலுத்தாமலேயே பொருட்கள் அல்லது சேவைகளைப் பெறும் மோசடிகள் இடம்பெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பான சம்பவங்களில் ஏமாறாமல் இருப்பதற்காக இலங்கை பொலிஸார், விற்பனையாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களை எச்சரித்துள்ளது.
பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
பொலிஸாரின் அறிவிப்பின்படி, மோசடிக்காரர்கள் பொருட்கள் அல்லது சேவைகளைப் பெற ஒப்புக்கொண்டு, பணம் செலுத்தப்பட்டுவிட்டதாகக் கூறி வாட்ஸ்அப் அல்லது மெசஞ்சர் வழியாகப் போலியான ரசீதுகளை அனுப்புகிறார்கள்.

இந்த மோசடி ரசீதுகளில் கணக்கு எண், பரிவர்த்தனை நேரம், பெயர் மற்றும் கட்டணத் தொகை உள்ளிட்ட துல்லியமானதாகத் தோன்றும் விவரங்கள் இடம்பெற்றிருக்கலாம்.
பின்னர், தங்கள் கணக்கில் பணம் உண்மையில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்ப்பதற்கு முன்பே, பொருட்களை ஒப்படைக்குமாறு அல்லது சேவைகளை வழங்குமாறு விற்பனையாளர்கள் அல்லது சேவை வழங்குநர்களை இந்த மோசடிக்காரர்கள் வற்புறுத்துகிறார்கள்.
எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், பொருட்கள் அல்லது சேவைகளை வழங்குவதற்கு முன் தங்கள் கணக்கில் பணம் வந்துசேர்ந்துள்ளதை உறுதிப்படுத்துமாறும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
YOU MAY LIKE THIS VIDEO