சிறையில் அடைத்தாலும் 2029 இல் சிம்மாசனம் ஏறுவார்..! தித்தகல்லே ஆனந்தசிறி தேரரின் சதித்திட்டம் அம்பலம்
கலபொட அத்தே ஞானசார தேரரின் காவியுடை கலைக்கப்பட்ட விவகாரத்தில் தித்தகல்லே ஆனந்தசிறி தேரர், ராஜபக்சர்களை ஆட்சிக்கு அமர்த்தவும், அநுர குமார திஸாநாயக்கவிற்கு எதிராக கிளர்ச்சியை தூண்டுவதற்கும் செயற்படுகின்றார் என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
அத்துடன், காவியுடை அகற்றத்தை ஒரு பிரச்சினையாக தூண்டி விட்டு, அரகலய போன்ற மாபெரும் போராட்டத்தை ஏற்படுத்தவும் அவர் முயற்சித்து கொண்டிருப்பதாக புலனாய்வு தகவல்களை வெளியிடும் சமூக ஊடகமொன்றில் குறிப்பிட்டுள்ளது.
தேரர்கள் போர்வையில் மறைக்கப்பட்ட குற்றவாளிகள்
இந்த விடயம் தொடர்பிலும் மேலும் தெரியவருகையில்,
7 குற்றச்சாட்டுக்களின் படி, கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் வைக்கப்பட்டிருக்கும் கலபொட அத்தே ஞானசார தேரர் சட்டத்தின் முன் ஒரு குற்றவாளியாகவே பார்க்கப்படுகின்றார். அவருடைய ஆடையை வைத்து அவர் ஒரு புனிதராக கருத முடியாது.
“சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என கோட்பாட்டிற்கமையவே ஜனாதிபதி, கலபொட அத்தே ஞானசார தேரரின் ஆடையை அகற்றலுக்கு விளக்கம் கொடுத்திருந்தார். மகாசங்கத்தினரின் திருப்திக்காக குழுவொன்றையும் அமைப்பதாக உறுதியளித்துள்ளார்.

இதற்கமைய, குழுவொன்றும், அமைக்கப்பட்டு தேரர்களுக்கான சட்டத்திட்டங்கள் வகுக்கும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், கலபொட அத்தே ஞானசார தேரருக்கு ஆதரவாக தித்தகல்லே ஆனந்தசிறி தேரர் களமிறங்கியிருக்கிறார். தித்தகல்லே ஆனந்தசிறி தேரரும் சட்டத்தின் முன்னர், ஒரு குற்றவாளியாகவே பார்க்கப்படுகின்றார்.
தேரராக இருந்து கொண்டு, 20 தேரர்கள் போதைப்பொருட்களுடன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்கள், அப்போதும் சிறைச்சாலை திணைக்களம் அவர்களின் காவியுடையை கலைத்தது, அப்போழுது அமைதியாக இருந்த மகாசங்கத்தினர் தற்போது குரல் கொடுப்பது வேடிக்கையாக இருக்கின்றது.
டி.வி. சானகவுடன் நெருங்கிய தொடர்பு
அதே போன்று, டி.வி. சானகவுடன், நெருங்கிய நண்பராக இருக்கும் தித்தகல்லே ஆனந்தசிறி தேரர் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஏன் ஈடுபடுகின்றார் என்ற உண்மையை பலரும் அறிந்திருக்கிறார்கள், அநுர ஆட்சியில் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி சிங்கள - பௌத்த மக்கள் மத்தியில் இன வன்முறையை தூண்டுவதற்காகவே இதுபோன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆனால், இதுபோன்ற சந்தர்ப்பங்கள் மக்கள் கூர்ந்து சிந்திக்க வேண்டும், ஏனெனின், ஞானசார தேரர், மிஹிந்தலை தேரர், உலபனே தேரர் மற்றும் சமந்தபத்திர தேரர் உள்ளிட்டவர்கள், தேரர்கள் என்ற போர்வையில் பல அக்கிரமங்களை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், பேரணியாக கிளம்பும் பல தேரர்கள் இதுபோன்ற குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காகவே துடிக்கின்றார்கள் என்பதை நாட்டு மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும், ஷிரந்தி ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு ஆதரவாக தான் நிற்பதாக தித்தகல்லே ஆனந்தசிறி தேரர் கூறியிருக்கிறார்.
மீண்டும் ராஜபக்சர்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டை மீண்டெழ முடியாத பாதாளத்தில் தள்ளவிடுவார்கள் என்பது தவிர்க்க முடியாத உண்மையாகவே பார்க்கப்படுகின்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சக்திவாய்ந்த ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த பலருக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் சிக்கல்! ஏற்பட்டுள்ள பரிதாபநிலை