கம்பீரின் கோரிக்கையை முதன்முறையாக நிராகரித்த பிசிசிஐ
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் கெளதம் கம்பீர், (Gautam Gambhir) களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் தொடர்பாக விடுத்த கோரிக்கையை பிசிசிஐ (BCCI) நிராகரித்துள்ளது.
கெளதம் கம்பீர், இந்திய அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர், தென்னாபிரிக்க முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸை (Jonty Rhodes) களத்தடுப்பு பயிற்சியாளராக நியமிக்குமாறு பிசிசிஐயிடம் கோரியிருந்தார்.
எனினும், இந்தக் கோரிக்கையை பிசிசிஐ தற்போது நிராகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிசிசிஐ விருப்பம்
நடந்து முடிந்த இருபதுக்கு20 உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணியின் வெற்றியுடன் தலைமை பயிற்றுவிப்பாளராக இருந்த ராகுல் டிராவிட் (Rahul Dravid) ஓய்வு பெற்றார்.
அத்துடன், துடுப்பெடுத்தாட்ட பயிற்றுவிப்பாளர் விக்ரம் ராதோர், பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் பரஸ் ஹம்ப்ரே மற்றும் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் திலிப் ஆகியோரும் ஓய்வை அறிவித்தனர்.
ஆனாலும், திலிப்பை களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக தொடர பிசிசிஐ விருப்பம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |