பாகிஸ்தானுக்கு செல்ல மறுக்கும் இந்திய அணி - செம்பியன்ஸ் தொடருக்கு புதிய சிக்கல்
2025ஆம் ஆண்டு செம்பியன்ஸ் கிரிக்கெட் தொடர் (Champions Trophy) பாகிஸ்தானில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுப்பு தெரிவிப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இந்தத் தொடருக்கு 2023ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக்கிண்ணத் தொடரில் முதல் 8 இடங்களை பிடித்த அணி தெரிவு செய்யப்பட்டிருந்தது.
2013ஆம் ஆண்டு செம்பியன்ஸ் கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, 2017 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியுற்றது.
எனினும், 2017ஆம் ஆண்டுக்கு பின்னர் செம்பியன்ஸ் தொடர் நடைபெறவில்லை.
ஐசிசியின் திட்டம்
இந்நிலையிலேயே, 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இதனை ஆரம்பிக்க ஐசிசி தீர்மானித்துள்ளது.
மேலும், பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்டை புதுப்பிப்பதற்கு ஐசிசி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக 2025 செம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தானில் நடத்த ஐசிசி திட்டமிட்டது.
இந்திய அணியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பட்சத்தில், இந்தியாவுக்கு மிக அருகாமையில் உள்ள பாகிஸ்தானின் லாகூர் நகரில் போட்டிகளை நடத்த ஐசிசி தீர்மானித்திருந்தது.
பிசிசிஐ வலியுறுத்தல்
இந்நிலையில், செம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு வரப்போவதில்லை என பிசிசிஐ அறிவித்துள்ளமையானது ஐசிசியை புதிய சிக்கலுக்குள் தள்ளியுள்ளது.
மேலும், ஆசியக் கிண்ணப் போட்டிகளை போல ஹைபிரிட் முறையில் செம்பியன்ஸ் கோப்பைத் தொடரை நடத்த வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தியுள்ளது.
அதன்படி, இந்தியா பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் துபாய் அல்லது இலங்கை ஆகிய நாடுகளில் நடத்த வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
அதேவேளை, இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் அந்தப் போட்டியையும் பாகிஸ்தானுக்கு பதிலாக வெளிநாட்டில் நடத்த வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தியுள்ளது
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
