துப்பாக்கி ரவைகளுடன் காலிமுகத்திடல் போராட்டக்காரர் கைது
காலிமுகத்திடல் போராட்டக்காரர்களில் ஒருவர் பெருந்தொகையான துப்பாக்கி ரவைகளுடன் பாணந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை பாணந்துறையில் நடைபெற்றுள்ளது.
பாணந்துறை - கொரகான பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
காலிமுகத்திடல் போராட்டம்
காலிமுகத்திடல் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த போது கண்டெடுத்ததாக கூறி T-56 ரக துப்பாக்கியின் 30 தோட்டாக்கள் அடங்கிய ரவைக்கூடு ஒன்றை சந்தேக நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்க எடுத்து வந்துள்ளார்.
குறித்த ரவைக்கூடு காலிமுகத்திடலில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த போராட்டக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூகவிரோத செயற்பாடுகள்
அத்துடன் அவர் இதனைக் கொண்டு சமூகவிரோத செயற்பாடுகள் எதனையும் மேற்கொண்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள காலிமுகத்திடல் போராட்டக்காரரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



