ஐ.தே. கட்சியின் 79ஆவது மாநாட்டில் வெளிநடப்பு செய்த தேரர்
ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது மாநாட்டில் தனது கட்சியின் பெயரை குறிப்பிடாததால் கோபத்தில் ஜனசெத்த பெரமுன கட்சியின் தலைவர் சீலரத்தின தேரர் மாநாட்டிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு விழா நேற்றையதினம்(20) காலை 9.00 மணிக்கு ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள மோனார்க் இம்பீரியல் வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
வெளிநடப்பு செய்த தேரர்
அதில் கலந்து கொண்டு இடையில் வெளிநடப்பு செய்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேரர்,
எனக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் ஏதோவொரு ஆசனத்தில் அமர வைத்திருந்தனர்.கட்சியின் தலைவர் என்ற மதிப்பு வழங்கவில்லை.அனைத்து கட்சிகளின் பெயர்கள் மற்றும் தலைவர்களின் பெயர்களை அறிவித்தனர்.
ஜனசெத்த பெரமுன என்ற பெயரும் இல்லை,கட்சி என்ற கணிப்பீடும் செய்யவில்லை.நாங்கள் இவர்களுக்கு எவ்வித ஆதரவும் வழங்கப்போவதில்லை.நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தனுஷ்க ராமநாயக்க மற்றும் கட்சியின் செயலாளர் தலத்தாவுக்கு கூட எங்களின் பெயர்கள் ஞாபகமில்லை?என்றார்.





எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவானந்தம் உயிருடன் இருப்பதை அறியும் ஆதி குணசேகரன்! கொலை செய்ய வரும் அடியாட்கள் Cineulagam
